புதன், 24 டிசம்பர், 2025

கவிஞர்.கோ.நாகேந்திரன் வாழ்க்கை குறிப்பு

கவிஞர்.கோ.நாகேந்திரன்        திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் வட்டம் ,சுக்காம்பட்டி கிராமம் ,சு.புதுப்பட்டியில்  கோவிந்தராஜ்,சண்முகவள்ளி தம்பதியருக்கு 05.04.1991 ல் மகனாக பிறந்தவர். இவருக்கு மகாலட்சுமி என்ற ஒரு சகோதரி இருக்கிறார்

கால்சட்டை பருவத்தில் கனவு காணுகிற சின்னஞ்சிறு வயதில் பொது வாழ்க்கைக்கை வந்தவர்.  கவிஞர்.கோ.நாகேந்திரன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே பெட்டிசன் பேப்பர் பேணாவோடுதான் அவரது இளைமைகாலம் போராட்ட வாழ்கைதான் துவக்கம்

பள்ளி பருவம் தொட்டு கல்லூரி காலம் முடியும் வரை கல்வி சார்ந்த பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார்

ஒரு பள்ளியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியராகவும்

ஒரு கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பேராசிரியராகவும் பணிசெய்தார்

தற்போது சமூக பணிகளில் தன்னை முழுமையாக ஒப்படைத்துகொண்டார்.

சமூக நலணுக்காய் சகலத்தையும் துறந்து சமூக பயணத்தை தொடர்ந்துவருகிறார்.

தெரு பிரச்சனை தொட்டு தேசப்பிரச்சனை வரை பல்வேறு போராட்டங்களில்

கவிஞர்.கோ.நாகேந்திரன் கலந்துகொண்டுள்ளார்

இளமை காலத்தில் கவிதை எழுத தொடங்கி இன்றுவரை இலக்கிய வானில் சிறகடித்து பறக்கும் இவரது சட்டபையில் எப்போதும் ஒரு பேணா வைத்திருப்பார்.    அந்த பேணா எப்போதும்        சகமனிதர்கள் மீதான நேசத்தையும்   சமூக அநீதிக்கு எதிரான ஆவேசத்தை எழுதுகிற மை நிரப்பப்பட்ட பேணாவாக இருக்கும்.செவ்வானம் என்ற அழகிய கவிதை தொகுப்பை இவர் மாணவராக இருக்கும்போதே வெளியிட்டார் .

சமூக ஆர்வலர், 

எழுத்தாளர்

பட்டிமன்றபேச்சாளர்,

சமூகநீதி போராளி,

சாதிஒழிப்பு போராளி

பெண்உரிமை போராளி

சமதர்மபோராளி

சமத்துவ போராளி

அம்பேத்கரிஸ்ட்

பெரியாரிஸ்ட்

கம்யூனிஸ்ட் என கவிஞர்.கோ.நாகேந்திரன் பன்முகத்தோடு சமூக பணிகளில் தொடர்ந்து செயல்படுபவர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கவிஞர்.கோ.நாகேந்திரன் வாழ்க்கை குறிப்பு

கவிஞர்.கோ.நாகேந்திரன்        திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் வட்டம் ,சுக்காம்பட்டி கிராமம் ,சு.புதுப்பட்டியில்  கோவிந்தராஜ்,சண்முகவள்ளி தம்ப...